ஜூன் மாதத்தில் ரூ.4,523 கோடிக்கு எண்ணெய் இறக்குமதி!

நம் நாட்டில் நவம்பர் முதல் அக்டோபர் வரை எண்ணெய் பருவ காலம் ஆகும்.கடந்த பருவத்தில் (2017நவம்பர் முதல் 2018 அக்டோபர்) வரை 1.50 கோடி டன் தாவர எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது.
இது 2016-2017 பருவ காலத்தில் 1.54 கோடி டன் தாவர எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது. இதை காட்டிலும் கடந்த பருவத்தில் எண்ணெய் இறக்குமதி 2.72 சதவீதம் குறைந்து இருந்தது. நாட்டில் ஒட்டுமொத்த தாவர எண்ணெய்(சமையல் மற்றும் இதர எண்ணெய் வகைகள் ) இறக்குமதியில் சமையல் எண்ணெய்யின் பங்கு 70 சதவீதமாக உள்ளது.
இந்த 70 சதவீதத்தில் பாமாயிலின் பங்கு அதிகமாக உள்ளது.கடந்த மே மாதத்தில் 81 கோடி டாலருக்கு தாவர எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது.ஆனால் ஜூன் மாதத்தில் 65 கோடி டாலராக குறைந்து உள்ளது.கடந்த ஆண்டு இதே மாதம் 84 கோடி டாலராக அதிகரித்து இருந்தது.அதை காட்டிலும் 23 சதவீதம் இறக்குமதி குறைந்து உள்ளது.
ஜூன் மாதத்தில் ரூபாய் மதிப்பில் கடந்த ஆண்டு ரூ.5,721 கோடியாக இருந்தது.இந்த வருடம் ரூ.4,523 கோடியாக உள்ளது. இறக்குமதியில் 21 சதவீதம் குறைந்து உள்ளது.அளவு அடிப் படையில் தாவர எண்ணெய் இறக்குமதி 11.05 லட்சம் டன்னாக உள்ளது.கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 10.42 லட்சம் டன்னாக இருந்தது.
இதன் மூலம் இறக்குமதியில் 6 சதவீதம் அதிகரித்து உள்ளது.இதே காலகட்டத்தில் சமையல் எண்ணெய் இறக்குமதி 10.08 லட்சம் டன்னில் இருந்து 10.71 லட்சம் டன்னாக அதிகரித்து உள்ளது.மற்ற எண்ணெய்களின் இறக்குமதி 34,014 டன்னாக குறைந்து உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025