என்னதான் குறைந்தாலும் சந்தோசமே இல்லை! குறைந்தது தங்கம்.. எவ்வளவு தெரியுமா?
சென்னை: கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், இன்று குறைந்துள்ளது.
சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, தங்கத்தின் விலையும் உயர்கிறது.
இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. நேற்று ரூ.560 ஆக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்ட நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. என்னதான் குறைந்தாலும் இல்லத்தரசிகள் முகத்தில் சந்தோசமே இல்லை என்றே சொல்ல வேண்டும்.
சென்னையில் இன்றைய நிலவரப்படி (17-05-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.54,160க்கும், கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.6,770க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.92.50க்கும், ஒரு கிலோ ரூ.92,500க்கும் விற்பனையாகிறது.
சென்னையில் நேற்றைய நிலவரப்படி (16-05-2024)22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.54,360க்கும், கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.6,795க்கும் விற்பனையானது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.50 அதிகரித்து ரூ.92.50க்கும், கிலோ வெள்ளி ரூ.1,500 அதிகரித்து ரூ.92,500க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.