Gold Price : ஏற்றமும் இல்லை .. இறக்கமும் இல்லை ..! தங்கம் விலையில் மாற்றமில்லை ..!
Gold Price : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, தங்கத்தின் விலையும் உயர்கிறது.
Read More :- 15 தொகுதிகளுக்கான விருப்ப பட்டியல்… பாஜகவிடம் கொடுத்த ஓபிஎஸ்!
இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்படுகிறது. அதன்படி, இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்க்கலாம். கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டிருந்த தங்கம் விலை வாரத்தின் முதல் நாளான நேற்று மாற்றம் இல்லாமல் அதே விலையில் விற்கப்படுகிறது.
சென்னையில் (12.03. 2024) இன்றைய நிலவரப்படி தங்கம் விலையில் மாற்றமில்லாமல், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6,150-க்கும், சவரனுக்கு ரூ.49,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே வேளை, ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்றைய விலையிலிருந்து ரூ0.50 காசுகள் உயர்ந்து ரூ.79.50-க்கும் கிலோவுக்கு நேற்றைய விலையிலிருந்து ரூ.500 குறைந்து ரூ.79,500-க்கும் விற்பனையாகிறது.
Read More :- மத்திய அரசை எதிர்ப்பதில் தயக்கம் ஏன்? தவெக தலைவர் விஜய் மீது விமர்சனம்.!
சென்னையில் (11.03. 2024) நேற்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6,150-க்கும், சவரனுக்கு ரூ.49,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதே வேளை, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ0.20 காசுகள் குறைந்து ரூ.79-க்கும் கிலோவுக்கு நேற்றைய விலையிலிருந்து ரூ.200 குறைந்து ரூ.79,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.