24,000 புள்ளிகளை நோக்கி நகரும் நிஃப்டி 50 ! 88 வர்த்தக அமர்வுகளில் புதிய உச்சம் !
பங்குச்சந்தை : இன்றைய நாளான வெள்ளிக்கிழமை நடந்த வர்த்தகத்தின் போது நிஃப்டி 50 23,000த்தை தாண்டி இருக்கிறது.
கடந்த வெகு நாட்களுக்கு பிறகு நேற்றைய நாளில் நிஃப்டி 50 புதிய உச்சத்தை தொட்டது. அதாவது நேற்று தேசிய பங்குச்சந்தை ஏற்கனவே 22,000 புள்ளிகள் கடந்த நிலையில் நேற்றைய நாள் நிஃப்டி50 1% சதவீதம் உயர்ந்து 22,806. 20 என்ற புள்ளிகள் பெற்று வரலாறு காணாத உச்சத்தை எட்டி இருந்தது. தற்போது அது இன்றைய வர்த்தக நாளில் 23,000 புள்ளிகளை நிஃப்டி 50 தாண்டி இருக்கிறது.
அதாவது 21,000-த்தில் இருந்து 22,000 வரையில் 1000 புள்ளிகளை பெறுவதற்கு கடந்த ஆண்டு டிசம்பர்-8 முதல் ஜனவரி-15 வரையில் 25 வர்த்தக அமர்வுகள் எடுத்து கொண்டுள்ளது. அதே போல 20,000த்தில் இருந்து 21,000 வரை எகிறிய 1000 புள்ளிகள் 60 வர்த்தக நகர்வுகளில் நடந்துள்ளது. மேலும், 19,000 புள்ளிகளில் இருந்து 20,000 எழுந்த 1000 புள்ளிகளும் 60 நகர்வுகளை எடுத்துக்கண்டது.
தற்போது கடைசியாக இந்த 22,000 முதல் 23,000 வரையிலான இந்த இடைப்பட்ட 1000 புள்ளிகள் எட்டுவதற்கு கிட்டத்தட்ட அதாவது ஜனவரி-15 முதல் இன்றைய நாள் வரை (மே-24,2024) 88 வர்த்தக அமர்வுகள் (Trading Session) எடுத்துள்ளது. நேற்றைய நாளில் 1% சதவீதம் உயர்ந்ததால் புதிய வரலாறு காணாத உச்சத்தை எட்டி இருந்தது. இந்த மாற்றங்களால் இதில் லாபம் ஈட்டியதில் மஹேந்திரா&மஹேந்திரா நிறுவனம் 60% சதவீதம் பெற்று முன்னிலை பெற்று வருகிறது.
அவர்களை தொடர்ந்து பாரத் பெட்ரோலியம் கார்ப் லிமிடெட் 41% மற்றும் பவர் கிரிட் கார்ப் லிமிடெட் 33% ஆதாயங்களுடன் முன்னிலையில் உள்ளனர். டாடா ஸ்டீல் நிறுவனமும் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவும் தலா 31% சதவீதத்துக்கும் அதிகமான முன்னேற்றங்களுடன் நெருக்கமாகப் பின்தொடர்கின்றன. தற்போது, நிஃப்டி 24,000 புள்ளிகளை மார்க்கை இலக்காகக் கொண்டு வர்த்தகம் இப்படியே சென்றால் பங்குசந்தையின் வேகத்தை மேலும் அதிகரிக்கும் என்று வெளிநாட்டு முதலீட்டார்களால் (FII) எதிர்பார்க்கப்படுகிறது.