ஹாங்காங்கில் நீரவ் மோடி பதுங்கல் ?அமலாக்கத்துறை சந்தேகம் ….
அமலாக்கத்துறை பஞ்சாப் நேசனல் வங்கி முறைகேட்டில் ஈடுபட்ட வைர வியாபாரி நீரவ் மோடி, ஹாங்காங்கில் பதுங்கியிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடாக கடன் உத்தரவாதப் பத்திரங்களைப் பெற்று, 12 ஆயிரத்து 600 கோடி ரூபாய் கடன் மோசடி செய்த வைர வியாபாரி நீரவ் மோடியும், அவரது உறவினரான மெகுல் சோக்சியும் தற்போது எந்த நாட்டில் உள்ளனர் என்பது மர்மமாக உள்ளது.
விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டும், தொழில் ரீதியான வேலைகள் இருப்பதால் விசாரணைக்கு ஆஜராக முடியாது என இருவரும் மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பினர்.
இதையடுத்து, அவர்கள் இருவர் மீதும் ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து, மும்பையில் உள்ள பணமோசடி தடுப்பு சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. அந்த விசாரணையின்போது, நீரவ் மோடியும், மெகுல் சோக்சியும் ஹாங்காங்கில் பதுங்கியிருக்கலாம் என நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சந்தேகம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.