மும்பை பங்குச்சந்தையில் வரலாறு காணாத உச்சம் !

Mumbai Share Market

சென்னை : மும்பை சென்செக்ஸ்ஸில் 1,000 புள்ளிகள் உயர்ந்து 5,242 புள்ளிகளுடன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் தேசிய பங்குசந்தையானது கடந்த சில நாட்களாகவே ஏற்றமும் இறுக்கமும் காணப்பட்டு வந்த நிலையில் மும்பையிலும் எந்த ஒரு ஏற்றமும் இல்லாமல் பங்குசந்தையானது நீண்ட நாட்கள் இறக்கத்திலே இருந்து வந்தது.

மேலும், இதனை குறித்து உள்துறை அமைச்சரான அமித்ஷாவும் ‘பங்கு சந்தை எகிறிவிடும் என்றும் வாங்குவதாக இருந்தால் உடனடியாக வாங்க விடுங்கள் என்றும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், மும்பையில் இன்று பங்குச்சந்தையான சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் உயர்ந்துள்ளது இதனால் தற்போது 5,242 உயர்ந்துள்ளது. அதிலும் சென்செக்ஸ் புள்ளிகள் 75,000 கடந்தது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

இந்திய பங்குச்சந்தைகளில் குறிப்பாக ஐடி மற்றும் வங்கித்துறை பங்குகள் தான் கணிசமான ஏற்றம் கண்டுள்ளது என தெரிவித்துள்ளனர். மேலும், தேசிய பங்குச்சந்தையானது 22,806. 20 என்ற புள்ளிகள் பெற்று வரலாறு காணாத உச்சத்தை இன்று எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் முதலீட்டாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்