அதிகளவிலான தடுமாறத்தை சந்தித்து வரும் மும்பை பங்குசந்தை – சென்செஸ் 211 புள்ளிகள் சரிவு!

Published by
பாலா கலியமூர்த்தி

நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் சற்று ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றன.

இந்திய சந்தைகள் இன்று ப்ரீ ஓபனிங் சந்தை தொடக்கத்தில் பலமான சரிவில் தான் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 581.19 புள்ளிகள் குறைந்து, 55,048.30 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 174.30 புள்ளிகள் குறைந்து, 16,394.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 2 பங்குகள் ஏற்றத்திலும், 1 பங்குகள் சரிவிலும்,3224 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் சற்று ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றன. இதனால் அதிகளவிலான தடுமாறத்தை மும்பை பங்குசந்தை சந்தித்து வருகிறது. இது வாரத்தின் இறுதி வர்த்தக நாள் என்பதால், சந்தையில் புராபிட் புக்கிங்காக இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 211.70 (-0.38%) புள்ளிகள் குறைந்து, 55,417.79 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 102.85 (-0.62%) புள்ளிகள் குறைந்து, 16,466.00 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்படுகிறது.

இதனிடையே, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்று குறைந்து, 74.91 ரூபாயாக காணப்படுகிறது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளளும் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. இதில், பிஎஸ்இ மெட்டல்ஸ் 4% சரிவிலும், நிஃப்டி பிஎஸ்இ, பேங்க் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாகவும், மற்ற குறியீடுகள் 1% கீழாகவும் சரிவில் உள்ளன.

நிஃப்டி குறியீட்டில் உள்ள ஏசியன் பெயிண்ட்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், ஹெச்.டி.எஃப்.சி, பஜாஜ் பைனான்ஸ், பார்தி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ, ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், ஓ.என்.ஜி.சி, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

இதுபோன்று BSE-இல், CarTrade பங்குகள் அதன் IPO வெளியீட்டு விலையில் இருந்து 2% க்கும் குறைவாக குறைந்து, ரூ.1,579 க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. ஆரம்ப ஒப்பந்தங்களில் ஸ்கிரிப் ரூ.1,476 ஆக குறைந்தது. CarTrade Tech IPO சந்தாவின் நிறைவு நாளில் 20.29 முறை சந்தா செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தினந்தோறும் படுகொலைகள்…அண்ணாமலை ஆவேசம்!

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தினந்தோறும் படுகொலைகள்…அண்ணாமலை ஆவேசம்!

சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…

6 hours ago

மங்களகரமா பாட்டுல ஆரம்பிக்கிறோம்! வாடிவாசல் படத்தின் தரமான அப்டேட்!

சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…

6 hours ago

சுனிதா வில்லியம்ஸுக்கு பாரத ரத்னா கொடுங்க! முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள்!

மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…

8 hours ago

பஞ்சாப் ரொம்ப உக்கிரமா இருப்போம்! எதிரணிக்கு எச்சரிக்கை விட்ட பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்!

பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…

9 hours ago

இந்த வருஷம் ஒன்னில்ல.., மொத்தம் 13.! களைகட்டும் ஐபிஎல் திருவிழா!

டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…

9 hours ago

வானதி சீனிவாசன் கேட்ட கேள்வி…அண்ணாமலையை சீண்டி பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி..!

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…

10 hours ago