வருமான வரித்துறையின் விசாரணை தீவிரம் !கோடிக்கணக்கில் ரூபாயை சுருட்டிய நிறுவனங்கள் …..
வருமான வரித்துறையின் விசாரணை தீவிரம், ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து வரி பிடித்தம் செய்யப்பட்டதில், 3 ஆயிரத்து 200 கோடி ரூபாயை சுருட்டிய நிறுவனங்கள் மீது அடைகிறது.
ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்படும் தொகை சரியாக செலுத்தப்படுகிறதா என்று வருமான வரித்துறையினர் ஆய்வு செய்த போது 447 நிறுவனங்கள் சுமார் 3 ஆயிரத்து 200 கோடி ரூபாய் வரியை மத்திய அரசுக்கு செலுத்தாமல் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த தொகையை தொழில் வளர்ச்சிக்கும், வேறு சில காரணங்களுக்கும் நிறுவனங்கள் பயன்படுத்தியதை வருமான வரித்துறையின் டிடிஎஸ் (TDS) பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதில் அரசியல்வாதிகளுடன் தொடர்பு கொண்ட பிரபல கட்டுமான நிறுவனம் ஒன்று 100 கோடி ரூபாய் வரிப் பணத்தை வணிகத்திற்காக பயன்படுத்தி இருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நிறுவனங்கள் மீது வருமான வரித்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.