சுவிட்சர்லாந்தில் மோடி பெருமிதம் ! இந்தியா என்றாலே வணிகத்திற்கு உகந்த நாடு தான்….

Published by
Venu

உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அருண் ஜேட்லி, சுரேஷ் பிரபு, பியுஷ் கோயல் உள்ளிட்ட 6 மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகருக்கு சென்றார். உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் 190 நாடுகளின் தலைவர்கள், நிறுவன சி.இ.ஓ.க்கள், வணிக வல்லுநர்கள் என 2 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.
Image result for switzerland economic meeting 2018 modi in ceo meeting

நேற்று டாவோஸ் நகருக்குச் சென்ற பிரதமர் மோடி, 60 நிறுவனங்களின் சி.இ.ஓ.க்கள் பங்கேற்ற வட்ட மேசை ஆலோசனையில் கலந்து கொண்டார். இதில் ஏர்பஸ், ஐ.பி.எம்., BEA சிஸ்டம்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் சி.இ.ஓ.க்கள் பங்கு பெற்று இருந்தனர்.
இதில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா என்றாலே வணிகத்திற்கு உகந்த நாடு என்றும், உலகளாவிய வணிகத்திற்கு இந்தியாவில் அற்புதமான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறினார். இந்தியாவின் பொருளாதார மேம்பாடு மற்றும் முதலீட்டுக்கான வாய்ப்பு குறித்தும் இந்த ஆலோசனையில் பிரதமர் மோடி எடுத்துரைத்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து முதலீட்டாளர்களை சந்தித்தும் பிரதமர் மோடி பேசவுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கும் உலக பொருளாதார மாநாடு இன்று  தொடங்கியது. உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, டாவோஸ் நகருக்கு தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்றார்.நேற்று  மாலை 5.30 மணிக்கு ஜுரிச் சென்றடைந்தார். விமான நிலையத்தில் பிரதமர் மோடியை அந்நாட்டுத் தலைவர்கள் வரவேற்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் …

Published by
Venu

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

7 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

13 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

13 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

13 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

13 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

13 hours ago