பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி வேகமெடுக்கும் என கருத்து !
பிரதமர் நரேந்திர மோடி வடகிழக்கு மாநிலங்களின் நிலையான மற்றும் வேகமான மேம்பாடுகளின் மூலம், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி வேகமெடுக்கும் என தெரிவித்திருக்கிறார்.
அசாம் மாநிலம் கவுஹாத்தியில்(Guwahati) Advatage Assam என்ற தலைப்பில் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டினை தொடங்கி வைத்து உரையாற்றிய பிரதமர் இவ்வாறு கூறியிருக்கிறார். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம், ஒவ்வொரு ஏழையின் உயர் சிகிச்சைக்கான மருத்துவக் கனவையும் பூர்த்தி செய்யும் உலகின் மிகப்பெரிய மருத்துவ சேவைத் திட்டம் என்றும் மோடி தெரிவித்திருக்கிறார்.
அசாம் உலக முதலீட்டாளர் மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடியுடன், பூடான் பிரதமர் ஷெரிங் தோப்கே (Tshering Tobgay) உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பேசிய ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி, தங்கள் நிறுவனம் சார்பில், அசாமில் அடுத்த மூன்று ஆண்டுகளில், 80 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், பல்வேறு துறைகளில், 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்றார்
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.