மைக்ரோசாப்ட் முடக்கம் எதிரொலி ..! சரிவை சந்தித்த இந்திய பங்கு சந்தைகள் ..!

மைக்ரோசாப்ட் : உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் இயங்குதள பாதிப்பால் விமான சேவை முதல் இந்திய பங்குச்சந்தை வரையில் அடிவாங்கி உள்ளது.
உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் இயங்குதளமானது இன்று காலை முதல் பாதிப்பை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக உலகம் முழுவதும் உள்ள ஐடி நிறுவனங்கள், விமான சேவைகள் என பல்வேறு சேவைகள் பாதிப்படைந்தது. அதே போல தற்போது இந்திய பங்கு சந்தை வர்த்தகத்தில் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது.
இதனால், உலகம் முழுவதும் நடைபெறும் வர்த்தமானது பெரும் அளவு சரிவை கண்டுள்ளது. ஆனாலும், பங்குச்சந்தை பிஎஸ்சி (BSE), என்எஸ்சி (NSE) சந்தைகள் எவ்விதமான பாதிப்பையும் எதிர்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளது. பெரிதளவு பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 738.81 புள்ளிகள் சரிந்து 80,604.65 புள்ளிகளிலும், நிஃப்டி 269.95 புள்ளிகள் குறைந்து 24,530.90 புள்ளிகளிலும் சரிந்துள்ளது.
இதன் மூலம் மும்பை பங்குச்சந்தையில் அனைத்து நிறுவனங்களில் பட்டியலிட்டு பார்க்கும் போது சந்தை மதிப்பானது நேற்றைய வர்த்தகத்தை விட சுமார் 454.3 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது ஆனால், தற்போது 446.3 லட்சம் கோடி ரூபாயாகச் சரிந்ததுள்ளது. இதன் காரணமாக, ஒரே நாளில் இந்திய பங்குச்சந்தையின் முதலீட்டாளர்கள் சுமார் 8 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இழப்பைச் சந்தித்துள்ளதாக கூறுகின்றனர்.
மேலும், சில மணி நேரங்களுக்கு முன்னாள் டெல்லி விமான நிலைய செக்-இன் சேவைகளும் முடங்கியது. அதனை தொடர்ந்து சென்னையில் இருந்து மும்பை, லக்னோ, பெங்களூர், மதுரை, திருவனந்தபுரம், பாட்னா, சிலிகுரி, ஹைதராபாத், கோவை செல்லும் உள்ளிட்ட 40 -க்கும் மேற்பட்ட விமானங்கள் சென்னையில் இருந்து சுமார் 3 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதை வெகு விரைவில் சரி செய்வதற்காக மைக்ரோசாப்ட் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025
சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து! வெளியேறிய பாக், வங்.,அணிகள்.!
February 25, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025