சதமடித்த தக்காளி விலை… தமிழக அரசு அதிரடி நடவடிக்கை.!
சென்னை : கடந்த சில நாட்களாக தக்காளி, வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அன்றாட உணவில் தக்காளி முக்கியத்துவம் வகிக்கிறது. சைவமோ, அசைவமோ என எந்த வகை சமையலிலும் தக்காளி பயன்படுத்தப்படாத நாளே கிடையாது.
தற்போது தக்காளிக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கும், பெரிய வெங்காயம் ரூ.100-ஐயும் நெருங்கியுள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் இருந்து தக்காளி, வெங்காயத்தை இறக்குமதி செய்துள்ள தமிழக அரசு, அவற்றை பண்ணை பசுமைக் கடைகளில் விற்று வருகிறது.
தமிழக அரசு எடுத்த இந்த அதிரடி நடவடிக்கையில், பசுமை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60, வெங்காயம் ரூ.40-க்கு விற்கப்படுகிறது. அதிலும், ஒருவருக்கு 2 கிலோ மட்டுமே வழங்கப்படுகிறது.
அதுமட்டும் இல்லாமல், கூட்டுறவு துறையின் கீழ், சென்னையில் உள்ள 27 கடைகளில் தக்காளி கிலோ ரூ.49-க்கும், வெங்காயம் ரூ.40-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையில், தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் 5 மாவட்ட விவசாயிகள் தக்காளி பயிரிடுவதற்காக 3 லட்சம் நாற்றுகளுக்கு முன்பதிவு செய்துள்ளனர்.