24 நாட்களுக்கு பின் குறைந்த பெட்ரோல், டீசல் விலை…!
24 நாட்களாக விலையில் எந்த மாற்றமின்றி தொடர்ந்த பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. கடந்த மாதம் 27-ம் தேதி முதல், சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு, 93.11 ரூபாயாகவும், டீசல் லிட்டருக்கு 86.45 ரூபாயாகவும் விற்பனையானது.
இந்நிலையில், 24 நாட்களாக விலையில் எந்த மாற்றமின்றி தொடர்ந்த பெட்ரோல், டீசல் விலை, இன்று பெட்ரோலுக்கு 16 காசுகள் குறைந்து 92.95 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 16 காசுகள் குறைந்து 86.29 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.