இழப்பைச் சந்தித்த டெக் மஹிந்திரா…6000 பேருக்கு வேலை? நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு.!
Tech Mahindra: ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா நிறுவனம் இந்த ஆண்டு, 6000 இளைஞர்களை புதியதாக பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளது.
நாட்டின் ஐந்தாவது பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டெக் மஹிந்திரா, நேற்றைய தினம் (ஏப்ரல் 25) கடந்த நிதியாண்டின் இறுதி காலாண்டில் தனது நிகர லாபத்தில் 40.9% குறைந்து ரூ.661 கோடியாக குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது ரூ.13,718 கோடியாக இருந்தது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவை தளமாகக் கொண்ட இந்த நிறுவனத்தின் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை கடந்த காலாண்டில் இருந்து 795 பேர் குறைந்து 1,45,455 ஆகவும், இது ஒரு வருடத்திற்கு முன்பு 1,52,400 ஊழியர்களிடமிருந்து 6,945 ஆகவும் குறைந்துள்ளது.
இந்நிலையில், 2024-25 நிதியாண்டில் முதல் காலாண்டில் இருந்து லாபத்தில் திருப்புமுனையைக் காணும் வகையில், புதியதாக 6000 இளைஞர்களை பணியில் அமர்த்த உள்ளதாக டெக் மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன் மூலம், ஒவ்வொரு காலாண்டிற்கு 1500 பேரை பணியமர்த்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், வருடத்தில் 50,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு AI குறித்து பயிற்சி வழங்கப்படும் என்று ஜோஷி வருவாய் ஆய்வாளர் கூறிஉள்ளார்.