13,000 கோடி கடன் வாங்கி வெளிநாடு தப்பிச்சென்ற நீராவ் மோடி! அதிரடி உத்தரவிட்ட லண்டன் நீதிமன்றம்!
குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,000 கோடி ரூபாய் கடன்வாங்கிவிட்டு, திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பி சென்றார். அவர் மீது வருமானத்துறையினர் மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்திய வெளியுறவு துறையானது லண்டன் அரசு உதவியுடன் நீரவ் மோடி லண்டனில் இருப்பதை கண்டறிந்து அவரை மார்ச் 19ஆம் தேதி லண்டனில் கைது செய்தனர். பின்னர் அவரை லண்டன் வேஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றம் தொடர் நீதிமன்ற காவலில் வைக்க ஆணையிட்டது.
இதனை தொடர்ந்து நீதிமன்ற காவலில் இருந்த நீராவ் மோடி வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணை முடிந்தததும், மீண்டும் அக்டோபர் 17ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சொல்லி லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.