பங்குச்சந்தை : வார கடைசி நாள்! முதலீட்டாளர்களே எந்தெந்த பங்குகளை வாங்கலாம்?
சென்னை : வாரத்தின் கடைசி நாளான இன்று பங்குசந்தைகளையில் எந்த பங்குகளை வாங்கினால் நஷ்டம் அடையாமல், லாபம் ஈட்டலாம் என நிபுணர்கள் கூறுவதைப் பார்க்கலாம்.
இந்த வாரம் தொடக்கம் முதல் இந்தியப் பங்குச் சந்தையானது ஏற்றம் கண்டு வருகிறது. மேலும், நேற்றைய வர்த்தக நாள் முடிவில் நம் மும்பை பங்குச் சந்தையான, (பிஎஸ்சி) சென்செக்ஸ் 147 புள்ளிகள் உயர்ந்து 81,053 புள்ளிகளில் நிறைவடைந்தது. அதே போல, தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 50, 41 புள்ளிகள் அதிகரித்து 24,811-ல் நிறைவடைந்தது.
வார இறுதி நாளான இன்றும் பங்குச்சந்தை ஏற்றத்துடனே தொடங்கியது. அதன்படி சென்செக்ஸ், 71.05 புள்ளிகள் அதிகரித்து 81,124 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. விரைவில் 82,000-த்தை நெருங்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல நிஃப்டி 50, 30.35 புள்ளிகள் அதிகரித்து 24,841 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
எந்த பங்குகளை வாங்கலாம்..!
வார இறுதி நாளின் முடிவில், அதாவது இன்று வாங்க வேண்டிய பங்குகள் என்னெவன்றால் ஆர்த்தி பார்மலாப்ஸ், பாலு ஃபோர்ஜ், ஆர்சிஎஃப், என்எல்சி இந்தியா மற்றும் என்சிசி ஆகிய ஐந்து பங்குகளை வாங்கலாம் என சாய்ஸ் ப்ரோக்கிங்கின் நிர்வாக இயக்குநர் சுமீத் பகடியா மற்றும் ஆனந்த் ரதியின் தொழில்நுட்ப ஆராய்ச்சியின் மூத்த மேலாளர் கணேஷ் டோங்ரே ஆகியோர் பரிந்துரைத்துள்ளனர்.
மேலும், ஏபிசி கேப்பிட்டல், சிப்லா, கல்யாண் ஜூவல்லர்ஸ், மணப்புரம் கோல்டு ஆகிய பங்குகள் சற்று குறைந்துள்ளதாகவும் கரூர் வைசியா வங்கி, டாட்டா மோட்டார்ஸ், எஸ் பேங்க் ஆகிய பங்குகள் சற்று உயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. வாரத் தொடக்கம் முதல், தற்போது வரை பங்குச்சந்தையில் எந்தவித மாற்றமும் இன்றி வர்த்தகம் நடைபெறுவதால் இன்று மதியத்திற்கு மேலும் பங்குச்சந்தை உயர்வதற்குத் தான் அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.