பெண்களே..! தங்கம் வாங்க சரியான நேரம்…! அதிரடியாக குறைந்த தங்கம் விலை…!
இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது.
தங்கம் விலையில், தினந்தோறும் ஏற்றம், இறக்கம் காணப்படுகிறது. பெண்கள் நகைகள் மீது அதிகமாக ஆசைப்படுவதுண்டு. எனவே, நகைகள் விலை அதிகரித்தாலும், குறைந்தாலும், பெண்கள் தான் அதனை உற்று கவனிப்பதுண்டு. ஏன்னென்றால், பெண்களின் அதிகப்படியான சேமிப்பு தங்கத்தில் தான் காணப்படுகிறது.
இந்நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.36,000-க்கு விற்பனையாகிறது. இதனையடுத்து, ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.30 குறைந்து, ஒரு கிராம் ரூ.4,500-க்கு விற்பனையாகிறது.
சென்னையில், வெள்ளியின் விலை கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்து ரூ.71.90-க்கு விற்பனையாகிறது.