கிரெடிட் கார்ட் உபயோகிப்பவரா நீங்கள்? தெரிஞ்சிக்கோங்க ..இந்த வங்கிகள் கொண்டு வந்த புதிய விதிகள்..!

Credit Card New Rules

கிரெடிட் கார்டு : கிரெடிட் கார்டு என்பது நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே தற்போது மாறிவிட்டது. ஷாப்பிங் மற்றும் பிற பரிவர்த்தனைகளுக்கு நாம் பெரும்பாலும் கிரெடிட் கார்ட் என்ற இந்த கடன் அட்டைகளைப் பயன்படுத்தி வருகிறோம்.

இதை க்ரெடிட் கார்ட்டுக்கு தற்போது இன்று முதல் அதாவது ஜூலை-1 முதல் பல வங்கிகளின் கிரெடிட் கார்டு தொடர்பான விதிகளில் மாற்றங்கள் வர உள்ளன. இதில் தற்போது ஐசிஐசிஐ (ICICI) வங்கி, எஸ்பிஐ (SBI) வங்கி, எச்டிஎஃப்சி (HDFC) வங்கி தங்களது புதிய விதிகளை அறிவித்துள்ளனர்.

எஸ்பிஐ வங்கி

இன்று முதல் (ஜூலை 1) வாடிக்கையாளர்களின் எந்தவொரு அரசாங்க பரிவர்த்தனைக்கும் வெகுமதி புள்ளிகளைப் (Bonus Points) பெற மாட்டார்கள் என்று எஸ்பிஐ அறிவித்துள்ளது. மேலும், ஒருசில எஸ்பிஐ கார்டுகளில் இந்த வசதி வருகிற ஜூலை 15 தேதி முதல் நிறுத்தப்படுகிறது.

ஐசிஐசிஐ வங்கி

இப்போது ஐசிஐசிஐ கார்டு வைத்திருப்பவர்கள் கார்டு மாற்றுவதற்கு 100 ரூபாய்க்கு பதிலாக 200 ரூபாய் செலுத்த வேண்டும் என புதிய விதியை கொண்டு வந்துள்ளனர். இதன் மூலம், காசோலை மற்றும் ரொக்கம் எடுப்பதற்கு ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படுவது நிறுத்தப்பட உள்ளது.

அதே போல சார்ஜ் ஸ்லிப் கோரிக்கை எடுக்க ரூ.100 வசூலிப்பதும் இன்று முதல் நிறுத்தப்பட உள்ளது. காசோலை மதிப்பின் மீதான 1% சதவீத கட்டணம் அதாவது குறிப்பிட்டு சொன்னால் ரூ.100 நிறுத்தவும் முடிவு செய்துள்ளனர்.

எச்டிஎஃப்சி வங்கி

ஹெச்டிஎஃப்சி வங்கியும் அதன் கிரெடிட் கார்டின் விதிகளை மாற்றப் போகிறது ஆனால் ஜூலை கிடையாது. இந்த விதி வருகிற ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரவுள்ளது. அதன்படி பார்க்க போனால் எச்டிஎஃப்சி வங்கி லிமிடெட்டின் கிரெடிட் கார்டை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இப்போது கிரேட் (CRED), பேடிஎம் (Paytm), செக் (Cheq), மொபிகுவிக் (MobiKwik) மற்றும் ஃப்ரீசார்ஜ் (Freecharge) போன்ற தளங்களைப் பயன்படுத்துபவர்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.

சிட்டி பேங்க்

மேலும் எச்டிஎஃப்சி வங்கி, கிரேட் , பேடிஎம் , செக் , மொபிகுவிக் மற்றும் ஃப்ரீசார்ஜ் போன்ற தளங்கள் மூலம் செய்யப்படும் கிரெடிட் கார்டு வாடகைக்கு புதிய கட்டணங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூ. 3,000க்கு உட்பட்டு வாடிக்கையாளர்களுக்கு வாடகை பரிவர்த்தனைகளுக்கு 1% சதவீதம் வசூலிக்கப்படும். இது ஆகஸ்ட் 1, 2024 முதல் அமலுக்கு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news
VCK Leader Thirumavalavan - TVK Leader Vijay
Sunil Gavaskar
Bengaluru
Lokesh Kanagaraj - Vijay
mugamathu kaif about pant
Donald Trump - Kamala Haaris