ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடித்திருந்தார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் பலத்த வரவேற்பை பெற்று 45 கோடி வசூலை தாண்டியுள்ளது.
இந்த நிலையில் படத்தை பார்த்துவிட்டு இயக்குனர்கள் பலரும் பாராட்டி வரும் நிலையில், படத்திற்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா ஆகியோர் நன்றியை தெரிவித்தனர்.
அந்த விஷயம் என்றாலே பயந்து நடுங்கும் ரஜினி! பிரபலம் சொன்ன சீக்ரெட்?
அப்போது பேசிய ராகவா லாரன்ஸ் ‘இந்த திரைப்படத்திற்கு இவ்வளவு வரவேற்பு கிடைத்து வருவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. குறிப்பாக இயக்குனர்கள் இந்த திரைப்படத்தை பாராட்டி வருவது மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகமே இதனை தங்களுடைய படம் என்று நினைத்து கொண்டாடி வருகிறார்கள்.
இதனை மிகவும் மகிழ்ச்சியாக நான் பார்க்கிறேன் சங்கர், மாரி செல்வராஜ் சார் உள்ளிட்ட பல இயக்குனர்களும் படத்தை பாராட்டியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என கூறியுள்ளார். அவரை தொடர்ந்து பேசிய கார்த்திக் சுப்புராஜ் ” இந்த படத்திற்கு மக்கள் பெரிய அளவில் ஆதரவு கொடுத்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது” என கூறினார்.
அதன்பின் செய்தியாளர்கள் அவரிடம் ஜிகர்தண்டா ட்ரிபிள் எக்ஸ் வருமா? என்ற கேள்வியை கேட்டனர். அதற்கு பதில் அளித்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ” கண்டிப்பாக என்னிடம் ஜிகர்தண்டா ட்ரிபிள் எக்ஸ் படம் செய்ய எண்ணம் இருக்கிறது. ஆனால், உடனடியாக என்னுடைய அடுத்த படமாக அதனை நான் செய்யமாட்டேன். ஒரு 5 வருடங்கள் ஆகவேண்டும்.
அதன்பிறகு ஜிகர்தண்டா ட்ரிபிள் எக்ஸ் படத்தை இயக்கலாம் என திட்டம் வைத்து இருக்கிறேன். ஜிகர்தண்டா முதல் பாகம் வெளியாக்க 8 ஆண்டுகளுக்கு பிறகு தான் இரண்டாவது பாகம் வெளியாகி இருக்கிறது. அதனால் தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் மீதும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. எனவே, என்னிடம் ட்ரிபிள் எக்ஸ் படம் எண்ணம் இருக்கிறது. நேரம் வந்தவுடன் அதனை எடுப்பேன்” எனவும் இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் தெரிவித்துள்ளார். மேலும், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இன்னும் பல திரையரங்குகளில் படத்தை அதிகமாக வெளியிடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…