ISRO அறிவிப்பு ….!ஜிசாட் – 6ஏ செயற்கைக்கோள் இருக்கும் இடம் தெரிந்தது …!
இஸ்ரோ தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட ஜிசாட் – 6ஏ செயற்கைக்கோள் இருக்கும் இடம் அறியப்பட்டதாக தெரிவித்துள்ளது. தகவல்தொடர்பு மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான இந்த செயற்கைகோள், கடந்த மாதம் 29 ஆம் தேதி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.
சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்ட பின்னர், ஜிசாட் – 6ஏ செயற்கைக்கோளுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த செயற்கைக்கோள் இருக்கும் சரியான இடத்தை கண்டுபிடித்து விட்டதாக கூறிய இஸ்ரோ, செயற்கைக்கோளுடன் தகவல் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.