புத்தாண்டில் இப்படியா? ஏற்றத்துடன் தொடங்கிய தங்கம் விலை!
புத்தாண்டு தினமான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ57,200க்கும் விற்பனை.
2025-ஆண்டின் முதல் நாளான ஜனவரி 1-ஆம் தேதி இன்று தங்கம் விலை உயர்ந்த காரணத்தால் நகை வாங்கும் நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்த நிலையில், இன்று 320 உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, சவரன் ரூ.57,200-க்கும், ஒரு கிராம்ரூ .40 உயர்ந்து ரூ.7,150-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையை பொறுத்த வரையில், கிராமுக்கு ரூ. 7,796க்கும், சவரனுக்கு ரூ.62,368க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம், வெள்ளி விலை பொறுத்தவரையில், ஒரு கிராம் 98 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும், இந்த ஆண்டு பல மடங்கு தங்கம் விலை அதிகரிக்கலாம் எனவும் நிபுணர்கள் கணித்துள்ளனர் அதற்கான முக்கியமான காரணமே, தேவை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கணக்கிட்டு அதிகரிக்கலாம் என கூறுகிறார்கள். கிராமிற்கு ரூ. 1,400 வரை உயர்ந்து ரூ.8,500ஆகவும், சவரனுக்கு ரூ.12,000 வரை உயர்ந்து ரூ.68,000ஆகவும் அதிகரிக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.