தங்கம் விலை உயர்வா? குறைவா? இன்றைய நிலவரம் இதோ!
தங்கம் விலை மாற்றமில்லாமல் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. ரூ. 58,960-க்கும் விற்பனை ஆகி வருகிறது.
சென்னை : தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தை கண்டு வருவதால் நகை வாங்கும் நகை பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். குறிப்பாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்கம் விலை சவரன் ரூ.60,000ஐ நெருங்கியது. அதன்பிறகு, கொஞ்சம் ஆறுதல் தெரிவிக்கும் விதமாக வார இறுதியில் அதாவது சனிக்கிழமைசவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 58,960-க்கு விற்பனையானது.
அதனை தொடர்ந்து வாரத்தின் முதல் நாளான இன்று (4.11.2024) திங்கள்கிழமை தங்கம் விலை எந்தவித மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 7,370-க்கும், ஒரு சவரன் ரூ. ரூ. 58,960-க்கும் விற்பனை.
அதேபோல், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.7,875-க்கும், ஒரு சவரன் ரூ. 63,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதைப்போல வெள்ளியின் விலை ரூ. 106-க்கும், ஒரு கிலோ ரூ. 1,06,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த 4 நாட்களாக வெள்ளி விலையும் மாற்றமில்லாமல் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.