சவூதிஅரேபியாவை முந்தி ஈராக் முதலிடம்!பெட்ரோலியத்துறை அமைச்சர் பதில் …..
சவூதிஅரேபியாவை முந்தி ஈராக் இந்தியாவுக்குக் கச்சா எண்ணெய் வழங்குவதில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், நடப்பு நிதியாண்டின் முதல் பத்து மாதங்களில் ஈராக்கில் இருந்து 3கோடியே 89லட்சம் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதே காலகட்டத்தில் சவூதி அரேபியாவில் இருந்து 3கோடியே 9லட்சம் டன் எண்ணெய் வாங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஈரான், வெனிசூலா, நைஜீரியா ஆகிய நாடுகளில் இருந்தும் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதாக பிரதான் மேலும் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.