இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு ! 51,000 புள்ளிகளை நெருங்கிய சென்செக்ஸ்
இந்திய பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் தொடங்கியுள்ளன.
முதலீட்டாளர்கள் நம்பத்தகுந்த சொத்துக்களின் உரிமையை வாங்கி விற்கக்கூடிய இடம் பங்குச்சந்தை ஆகும். கடந்த 1-ஆம் தேதி 2021 – 22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.பட்ஜெட் அறிவிப்புகள் வெளியாகிய நிலையில்,அண்மைக்காலமாக மும்பை மற்றும் தேசிய பங்குசந்தைக்களில் வர்த்தகம் ஏற்றத்துடன் காணப்படுகிறது.
அந்த வகையில் இன்று மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 334.44 புள்ளிகள் உயர்ந்து , 50,948.73 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி குறியீடு 96.40 புள்ளிகள் அதிகரித்து 14,992.05 ஆகவும் உயர்ந்துள்ளது.