மோடி பதவி ஏற்பு: உச்சம் தொட்ட இந்திய பங்குச்சந்தைகள் ..!
பங்குச்சந்தை: மோடி 3-வது முறையாக பதவியேற்றவுடன் இந்தியா பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல் நாளான இன்று உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தல் 7-கட்டங்களாக நடைபெற்று கொண்டிருந்த நிலையில் அதன் பிறகு நடந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் புள்ளகள் உச்சத்தை எட்டியது.
அதன் பிறகு நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், இந்திய பங்குச்சந்தைகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் இறக்கம் கண்டிருந்தது. அதன் பிறகு அடுத்த 2 நாட்களில், இறங்கிய புள்ளிகளுக்கு நிகராக அந்த 2 நாட்கள் வர்த்தகம் நடைபெற்றதுடன், இந்திய பங்குச்சந்தையின் புள்ளிகளும் புதிய உச்சத்தை கண்டிருந்தது.
தற்போது, நேற்றைய நாள் இரவில் 3-வது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்றார். இதனால் இன்று காலை, அதாவது வாரத்தின் முதல் நாளான இன்று காலை 09:21 மணி நிலவரப்படி, NSE நிஃப்டி 91.90 புள்ளிகள் உயர்ந்து 23,382.05 ஆகவும், BSE சென்செக்ஸ் 233.11 புள்ளிகள் உயர்ந்து 76,926.47 ஆகவும் உயர்ந்து புதிய உச்சத்தை கண்டு வர்த்தகம் நடைபெற்று வருகிறது.