ஏற்றத்தில் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை! தற்போதைய நிலை என்ன?
நேற்றைய வர்த்தக நாளில் இறக்கம் கண்டு வந்த இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
சென்னை : இந்த வாரத்தின் தொடக்கத்தில் ஏற்றத்துடன் வர்த்தகம் நடைபெற்று வந்த இந்திய பங்குச்சந்தை நேற்றைய நாள் சரிவை கண்டது. அதிலும், நேற்று ஏற்றத்துடன் வர்த்தகம் தொடங்கிய நிலையில் மதியத்திற்கு மேல் சரிவை கண்டு அது சரிவுடனே நேற்றைய நாள் முடிவடைந்தது.
இந்த நிலையில், இன்று காலை நேற்று ஏற்பட்ட சரிவிலிருந்து மீண்டு வந்தது. அதில், சென்செக்ஸ் 269 புள்ளிகள் அதிகரித்து 81, 797 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வந்தது. அதே போல தேசிய பங்குச்சந்தை நிப்டி 110 புள்ளிகள் உயர்ந்து 25,016 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வந்தது.
அதே நேரம் சர்வதேச சந்தையில் க்ரீனில் இருந்து வருவதால் ஆசிய பங்குச்சந்தைகளும் அதற்கு ஏற்றது போல ஏற்றத்திலே இருக்கிறது.
மேலும், அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் வர இருப்பாதால் சர்வேதச அளவில் பங்குச்சந்தை அடிவாங்கலாம் என பயம் முதலீட்டாளர்களுக்கு இடையே எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், தேர்தல் விவாதங்களை பற்றி முதலீட்டாளர்கள் தீவிரமாக கவனித்து வருகின்றனர்.
லாபமாகும் நிறுவனங்கள் :
அதானி போர்ட்ஸ், அப்பல்லோ மருத்துவமனை, பஜாஜ் ஆட்டோ, டாடா ஸ்டீல், ஸ்ரீராம் ஃபினான்ஸ், பாரதி ஏர்டெல், கோடாக் மஹிந்திரா, டெக் மஹிந்திரா, ஈச்சர் மோட்டர்ஸ், பிரிட்டானியா, கோல் இந்தியா, எஸ்.பி.ஐ, பஜாஜ் ஃபினான்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், ஐ.டி.சி., டிவிஸ் லேப்ஸ், அதானி எண்டர்பிரைசிஸ், ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
நஷ்டமாகும் நிறுவனங்கள் :
டாடா மோட்டர்ஸ், மாருதி சுசூகி, பஜாஜ் ஃபின்சர்வ், ஆக்ஸிஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, எம்&எம், நெஸ்லே, டி.சி.எஸ்., டிவிஸ் லேப்ஸ், ரிலையன்ஸ் அகிய நிறுவனங்கள் நஷ்டத்துடன் வர்த்தகமாகி வருகிறது.