Categories: வணிகம்

கடும் வீழ்ச்சியில் இந்திய பங்குச்சந்தை.! சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு.!

Published by
செந்தில்குமார்

இந்தியாவின் பொருளாதாரம் என்பது வேகமாக வளர்ந்துவரும் உலகப் பொருளாதாரங்களில் ஒன்றாக இருந்தாலும், அதன் சந்தைகள் வீழ்ச்சியிலேயே உள்ளன. அதன்படி, இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் ஆன சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்தே சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.

ஆனால், மூன்று நாட்களாக 200 முதல் 500 புள்ளிகள் வரை மட்டுமே சரிவடைந்த சென்செக்ஸ், இன்று 900 புள்ளிகள் சரிந்துள்ளது. அதோடு, நிஃப்டி 150 புள்ளிகளுக்கு மேல் சரிந்து வர்த்தகமானது. இவ்வாறு ஏற்றமடையாமல் சரிவிலேயே இருந்ததால், இன்றைய வர்த்தகத்தில் இதுவரை முதலீட்டாளர்கள் ரூ. 5 லட்சம் கோடிக்கு மேல் இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து நான்காவது வர்த்தக நாளான இன்று 63,774 புள்ளிகள் என சரிவுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில், 900.91 புள்ளிகள் குறைந்து 63,148.15 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. அதோடு, தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 264.90 புள்ளிகள் உயர்ந்து 18,857.25 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.

முந்தைய வர்த்தக நாளின் முடிவில், சென்செக்ஸ் 522.82 புள்ளிகள் சரிந்து 64,049.06 புள்ளிகளாகவும், நிஃப்டி 159.60 புள்ளிகள் சரிந்து 19,122.15 புள்ளிகளாகவும் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்த சரிவிற்கு நடந்து வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் மற்றும் அமெரிக்கப் பத்திர வருவாயின் அதிகரிப்பு ஆகியவை காரணங்களாகக் கூறப்படுகிறது.

மேலும், பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.89 டாலர் விலை குறைந்து 89.24 டாலராக விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் 1 பிபிஎல் கச்சா எண்ணெயின் விலை 43.00 அல்லது 0.61% உயர்ந்து ரூ.7,035 ஆக விற்பனையாகி வருகிறது. பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாறுதலால், சென்செக்ஸில் மஹிந்திரா & மஹிந்திரா, அல்ட்ராடெக் சிமெண்ட், மாருதி சுசுகி இந்தியா, லார்சன் & டூப்ரோ லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றமடைந்துள்ளன.

இண்டஸ்இண்ட் வங்கி, எச்சிஎல் டெக்னாலஜிஸ், ஐடிசி லிமிடெட், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்துள்ளன. முன்னதாக நிஃப்டி முதல் முறையாக 20 ஆயிரம் புள்ளிகளை எட்டி சாதனை படைத்தது. அதோடு சென்செக்ஸ் 64,000, 65,000, 66,000, 67,000 என நான்கு மைல் கல்லைத்தாண்டி புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

ஏலத்தில் கலக்கிய சிஸ்கே..! மஞ்சள் படையில் இன்னும் யாரை எல்லாம் எடுக்கலாம்?

ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…

2 minutes ago

AUS vs IND : ‘ஆல் ஏரியாலையும் கில்லி தான்’ …ஆஸியை கதிகலங்க வைத்து முதல் வெற்றியை ருசித்த இந்திய அணி!

பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…

14 minutes ago

நெருங்கி வரும் தாழ்வு மண்டலம்… துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…

21 minutes ago

சிறகடிக்க ஆசை சீரியல்- அண்ணாமலை காலில் விழுந்து அழும் மீனா..!

சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில்  அண்ணாமலையின் பேச்சால் எமோஷனல்  ஆகும் மீனா.. ரோகிணியின் புதிய திட்டம்.. உதவி…

31 minutes ago

ரெட் அலர்ட்: தமிழகத்தை நோக்கி தாழ்வு மண்டலம்… டெல்டா மாவட்டங்களை குறிவைக்கும் கனமழை.!

சென்னை : தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளிலும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலின் மத்திய…

57 minutes ago

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் எப்போது தொடங்கும்? அப்பாவு கொடுத்த அப்டேட்!

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…

1 hour ago