கடும் வீழ்ச்சி கண்டுள்ள இந்தியாவின் முக்கிய 8 தொழிழ்த்துறை!

Default Image

நம்நாட்டு பொருளாதாரம் தற்போது மந்தநிலை அடைந்துள்ளது. இதனை மீனும் வளர்ச்சி பாதைக்கு கொண்டுவர மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த காலாண்டில் இந்தியாவில் உற்பத்தி துறை வளர்ச்சி 5 சதவீதம் குறைந்துள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் குறிப்பிட்ட 8 துறைகளின் வளர்ச்சி 4.7 சதவீதமாக இருந்தது. ஆனால் இந்தாண்டு, நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சிமெண்ட், மின்சாரம் என முக்கிய துறைகள் உற்பத்தி சதவீதம் குறைந்துள்ளது.
அதேபோல, உரம், எஃகு துறை வளர்ச்சி அதிகரித்துள்ளது. மேலும், இந்த வருடம் இதே கால அளவில் 8 துறைகளின் வளர்ச்சியானது 2.4 சதவீதமாக இருக்கிறது. அதேபோல கடந்த ஆண்டு இதே கால அளவில், 8 துறைகளின் வளர்ச்சி சதவீதம் 5.7 சதவீதமாக இருந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்