புதிய உச்சத்தில் இந்திய பங்குச்சந்தை !
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் நேற்று 35 ஆயிரத்து 965 புள்ளிகளுடன் வர்த்தக முடிந்த நிலையில் இன்று 80 புள்ளிகளுக்கும் அதிக உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது
இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் உயர்வுடன் தொடங்கியது.இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் அதிகபட்சமாக 36 ஆயிரத்து 151 புள்ளிகளைத் தொட்டது. அதேபோன்று நிஃப்டி நேற்று 11 ஆயிரத்து 27 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்த நிலையில் இன்று உயர்வுடன் தொடங்கி அதிகபட்சமாக 11 ஆயிரத்து 100 புள்ளிகளைத் தொட்டது.
நிதியமைச்சர் அருண்ஜேட்லி இன்று பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும் நிலையில், சாதகமான அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில் பங்குச்சந்தைகளில் வர்த்தகம் உயர்வுடன் நடைபெற்று வருகிறது.