இந்திய பங்குச்சந்தைகளில் இன்று சரிவு !
இந்திய பங்குச்சந்தைகளில் இன்று வர்த்தகம் சரிவை சந்தித்தது.மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் இன்று சரிந்துள்ளது.
மும்பை பங்குச்சந்தையில் இன்றைய காலை நேர வர்த்தகத்தில், குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 124 புள்ளிகள் சரிந்து, 35,909 புள்ளகளாக இருந்தது. அதுபோலவே தேசிய பங்குச்சந்தையில் குறியீட்டு எண்ணான நிப்டி 38.95 புள்ளிகள் சரிந்து 11,010 புள்ளிகளாக இருந்தது.

நாடாளுமன்றத்தில் நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக முதலீட்டாளர்கள் சந்தையை அணுகுவதாக பங்கு வர்த்தக ஆலோசகர்கள் தெரிவித்தனர். மேலும் சர்வதேச முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்ததாலும் வர்த்தகம் சரிவை சந்தித்தது. ஐடி, மருத்துவம் உள்ளிட்ட துறை சார்ந்த பங்குகள் அதிகம் சரிவை சந்தித்தன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.