வணிகநேர முடிவில் இந்தியப் பங்குச்சந்தைகள் வீழ்ச்சி!
இன்று இந்திய பங்குச்சந்தைகளில் சரிவு காணப்பட்டது.மும்பை பங்குச்சந்தை இன்றைய வணிகநேர முடிவில் சென்செக்ஸ் 510புள்ளிகள் சரிந்து 33ஆயிரத்து 176ஆக உள்ளது. தேசியப் பங்குச்சந்தை நிப்டி 165புள்ளிகள் சரிந்து பத்தாயிரத்து 195ஆக உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்குதேசக் கட்சி விலகியது, பல்வேறு பொருட்களுக்கு இந்தியா ஏற்றுமதி மானியம் வழங்குவதை எதிர்த்து உலக வணிக அமைப்புக்கு அமெரிக்கா சென்றது ஆகியவற்றால் பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்ததாகக் கூறப்படுகிறது.
உருக்கு, அலுமினியம் ஆகியவற்றுக்கு அமெரிக்கா இறக்குமதி வரியை உயர்த்தியதை அடுத்து உலோக நிறுவனங்களின் பங்குகள் 2விழுக்காட்டுக்கு மேல் வீழ்ச்சியடைந்தன. டாட்டா மோட்டார்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ், ஹீரோ மோட்டார் கார்ப்பரேசன், சன் பார்மா ஆகியவற்றின் பங்குகள் வீழ்ச்சியடைந்தன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.