நாட்டின் தொழில் உற்பத்தித் துறை 5 ஆண்டுகளுக்குப் பின்னர் பெருமளவு வளர்ச்சி!
இந்தியாவை பொறுத்தவரை ஜி.எஸ்.டி. வந்தவுடன் பொருளாதார வளர்ச்சி நாட்டின் உற்பத்தி குறையும் என்றே ஒரு கருத்து நிலவி வந்தது .இந்நிலையில் தற்போது அதற்க்கு மாறாக தற்போது நாட்டின் தொழில் உற்பத்தித் துறை 5 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த டிசம்பர் மாதம் பெருமளவு வளர்ச்சியை அடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பின்னர் 2017 டிசம்பர் மாதத்தில் உற்பத்தித் துறை 54.7 சதவீத வளர்ச்சியை அடைந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இதனால் உள்நாட்டு உற்பத்தியில் பெரும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது .
இடைப்பட்ட காலத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மட்டுமே புதிய ஆர்டர்கள் அதிகரித்துக் காணப்பட்டிருப்பதாகவும், அதன் பின்னர் கடந்த டிசம்பர் மாதத்தில் ஆர்டர்கள் மற்றும் விநியோகத்தில் பெரும் முன்னேற்றம் காணப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் வெளிநாட்டு ஆர்டர்கள் அதிகரித்து வந்திருப்பதையும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
source: dinasuvadu.com