சீனாவை பின்னுக்குத்தள்ள தயாராகும் இந்தியா?சாத்தியமாகுமா ?
சீனாவைவிட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரியவந்துள்ளது. நிதியாண்டின் அக்டோபர் – முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் ஜி.டி.பி. எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.9 சதவீதமாக இருக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பொருளாதாரம் மந்த நிலை நீங்கி வளர்ச்சியை நோக்கி முன்னேறி வருவதாகவும் மூன்றாவது காலாண்டில் தொழில் மற்றும் சேவைத் துறைகளின் வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் அக்டோபர் – முதல் டிசம்பர் வரையான காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியடைய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதன்படி சீனாவின் ஆண்டு பொருளாதார வளர்ச்சியான 6 புள்ளி 8 சதவீதத்தை விட இந்திய பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.