அமெரிக்கா இந்தியாவுக்கு அழுத்தம்!
அமெரிக்கா தொழிலதிபர்கள், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை குறைக்க வேண்டும் என இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்துடன், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 12 பொருட்களுக்கான சுங்கவரியை மத்திய அரசு அதிகரித்தது. இதனால், ஃபோர்டு கார், ஆப்பிள் போன் உள்ளிட்டவற்றின் விலை அதிகரித்துள்ளது. அண்மையில் அமெரிக்க தயாரிப்பான ஹேர்லி டேவிட்சன் (Harley-Davidson) மோட்டார் சைக்கிள்களுக்கான வரியை குறைக்குமாறு அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தி இருந்தார். இதனை அடுத்து, ஹேர்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளுக்கான வரியை மத்திய அரசு பெருமளவு குறைத்தது. இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிற பொருட்களுக்கும் வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.