கடந்த காலாண்டில் அதிகமாக ஊழியர்கள் வெளியேறிய ஐடி நிறுவனம்… வெளியான ரிப்போர்ட் இதோ…
கடந்த காலாண்டில் அதிகமாக ஊழியர்கள் வெளியேறிய ஐடி கம்பெனி வரிசையில் இன்ஃபோசிஸ் முதலிடத்தில் உள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் வரையில் வருடத்தின் 2வது காலாண்டில் ஐடி நிறுவங்களின் செயல்பாடுகளை ஆராய்ந்த போது வெளியான தகவலின் படி அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. ‘
அதாவது, அதிகளவு எந்த ஐடி நிறுவனம் ஊழியர்களை வெளியேற்றி வருகிறார்கள் என செய்தி வெளியாகியுள்ளது. அதில் முதல் இடம் பிடித்துள்ள ஐடி கம்பெனி இன்ஃபோசிஸ் ஆகும். அங்கு ஊழியர்கள் வெளியேறும் அதிகபட்ச விகிதம் 28.4% ஆக உள்ளது.
அதற்கடுத்ததாக, 23.8% பணியாளர்கள் வெளியேறி HCL டெக் நிறுவனம் இரண்டாம் இடத்தில் உள்ளது. 23.3% விப்ரோ மற்றும் 19.7% TCS உடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
அதே போல, இன்ஃபோசிஸ் கடந்த காலாண்டில் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களைச் சேர்த்துள்ளது குறிப்பிட தக்கது. அதை தொடர்ந்து விப்ரோ, டிசிஎஸ் மற்றும் HCL டெக் நிறுவனம் உள்ளது.