ICICI வங்கியின் தலைமைச் செயலதிகாரி சந்தா கோச்சார்க்கு தொடரும் சிக்கல் ..!வீடியோகான் நிறுவனத்துக்கு முறைகேடாக கடன் வழங்கியதாகக் குற்றம்சாட்டு…!
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைமைச் செயலதிகாரி பொறுப்பிலிருந்து வீடியோகான் நிறுவனத்துக்கு முறைகேடாக கடன் வழங்கியதாகக் குற்றம்சாட்டப்படும் சந்தா கோச்சார், விலகுமாறு அதன் பிற இயக்குநர்கள் வலியுறுத்துவதாகக் கூறப்படுகிறது.
வீடியோகான் நிறுவனத்துக்கு 2012ஆம் ஆண்டில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி 3 ஆயிரத்து 250 கோடி கடன் வழங்கி அதில் 2 ஆயிரத்து 849 கோடி ரூபாய் நிலுவை உள்ளது. கடன் வழங்கியதற்கு கைமாறாக பல கோடி ரூபாயை கணவரின் அறக்கட்டளைக்கு பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில், வருமான வரித்துறை, சிபிஐ உள்ளிட்ட விசாரணைக்கு சந்தா கோச்சாரின் உறவினர்கள் உட்படுத்தப்பட்டனர். பங்கு சந்தையின் முதல் நாளன்று ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் பங்கு மதிப்பு குறைந்த நிலையில், அதன் இயக்குநர்களின் கூட்டம் மும்பையில் நடைபெற்றதாகவும், அதில் சிலர், சந்தா கோச்சாரை தலைமைச் செயலதிகாரி பொறுப்பிலிருந்து நீக்க வலியுறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. சந்தாவின் பதவி வரும் 2019 மார்ச் 31-உடன் முடிவடைகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.