Muhurat Trade 2023: சிறப்பு வர்த்தகத்தில் லாபம் அடைவது எப்படி.? முழுவிவரம் இதோ.!
Muhurat Trade 2023: நாடு முழுவதும் வரும் நவம்பர் 12ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இந்த நாளில் ஏராளமாக பாரம்பரிய பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அதில் முதலீட்டாளர்களால் பின்பற்றப்படும் முக்கியமான ஒன்றுதான் ‘முஹுரத் வர்த்தகம்’ ஆகும் .
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு முஹுரத் வர்த்தகம் எனும் சிறப்பு வர்த்தகம் நடைபெறும். முஹுரத் என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில், மங்களகரமான நேரம் என்று பொருள். இந்த மங்களகரமான நேரத்தில் முதலீட்டாளர்கள், தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் பங்குகளை வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
முஹுரத் வர்த்தகம் 2023: தீபாவளி நாளின் சிறப்பு வர்த்தகம்.! எப்போது தொடக்கம்..முழு விவரம் இதோ.!
சிறப்பு வர்த்தக நேரம்
ஏனென்றால் இந்த நாளில் பங்குகளை வாங்குவது என்பது வரவிருக்கும் 2024 நிதியாண்டில் நல்ல அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் தேடித்தரும் என்று நம்பிக்கை உள்ளது. சாதாரண நாட்களில் இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் காலை 9.15க்குத் தொடக்கி மாலை 3.30 மணிக்கு முடிவடையும். ஆனால் இந்த சிறப்பு வர்த்தக நாளில் ஒரு மணிநேரம் மட்டுமே வர்த்தகம் நடைபெறும்.
அதன்படி, மாலை 6 மணி முதல் 7.15 மணி வரை ஒரு மணி நேர வர்த்தகத்திற்காக, மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி போன்ற இந்திய பங்குச்சந்தைகள் திறக்கப்படும். இதில் 15 நிமிட சந்தைக்கு முந்தைய அமர்வு அடங்கும். இதனால் மாலை 6.15 மணியில் இருந்து 7.15 வரை சிறப்பு வர்த்தகம் நடைபெறும்.
முஹுரத் வர்த்தகத்தால் யார் பயனடையலாம்.?
முஹுரத் வர்த்தக அமர்வில் வர்த்தக அளவுகள் அதிகமாக இருப்பதால் பங்குகளை வாங்க அல்லது விற்க ஒரு நல்ல நேரம் ஆகும். இந்நாள் அனைவரையும் நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் இருக்க வைக்கும் என்பதால், வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பங்குகளை அதிகமாக வாங்குவார்கள்.
இதனால் பங்குச்சந்தை ஏற்றத்துடன் இருக்கும். எனவே இந்த வர்த்தக அமர்வு முதலீட்டாளர்கள், அனுபவம் வாய்ந்த வர்த்தகர்கள், புதிதாக பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள் முஹுரத் வர்த்தக அமர்வில் பயனடையலாம்.
முஹுரத் வர்த்தக குறிப்புகள்
தீபாவளி முஹுரத் வர்த்தக அமர்வின் போது, வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் ஒரு தெளிவான திட்டத்தை வைத்திருக்க வேண்டும். அதாவது, சிறப்பு வர்த்தக அமர்வின் போது நீங்கள் வாங்க அல்லது விற்க திட்டமிட்டால், முன்கூட்டியே நீங்கள் எந்த பங்கை வாங்க அல்லது விற்க உள்ளீர்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த சிறப்பு அமர்வின் போது அனைத்து பங்குகளும் வர்த்தகத்திற்கு ஏற்றதாக இருக்காது. உங்களுக்கு லாபத்தை அளிப்பதற்கு சரியான பங்குகளைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். மேலும் முஹுரத் வர்த்தகப் பங்குகளைப் பற்றி ஆராய்ந்து வர்த்தகத்தில் ஈடுபடவேண்டும்.
சில வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் முஹுரத் வர்த்தக அமர்வின் போது, பெரிய அளவிலான பங்குகளை வாங்கவும் விற்கவும் செய்வார்கள். இந்த அமர்வு ஒரு மணி நேரம் மட்டுமே செயல்படும் என்பதால் பெரிய பங்குகளை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். இந்த குறிப்புகளை பயன்படுத்தி முஹுரத் வர்த்தக அமர்வில் வர்த்தகம் செய்யும் போது, நீங்கள் லாபம் ஈட்டலாம்.