கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் குறைந்து வந்த நிலையில், இன்று திடீரென உச்சம் கண்டுள்ளதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதஹலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.
பங்குசந்தை ஏற்றம் இறக்கம் கண்டால், தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்படும். கடந்தவாரம் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.
(01.11.2023) இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.45560க்கும், கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ரூ.5,695க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 70 காசு அதிகரித்து ரூ.77.70க்கும், கிலோ வெள்ளி ரூ.77,700க்கும் விற்பனையாகிறது.
(31.10.2023) நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 குறைந்து ரூ.45,488க்கும், கிராமுக்கு ரூ.29 குறைந்து ரூ.5,686க்கும் விற்பனையானது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.20 குறைந்து ரூ.77க்கும், கிலோ வெள்ளி ரூ.77,000க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென் தமிழகத்தில் முதல் 'மினி டைடல் பார்க்'-ஐ கடந்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் திறந்து…
டெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராஃபி கோப்பைக்கான இந்திய அணியை கேப்டன் ரோஹித் ஷர்மா, தேர்வுக்குழு…
சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வரும் பன்னாட்டு புத்தகத் திருவிழாவில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்ட 30 நூல்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
சென்னை: த.வெ.க தலைவர் விஜய் பரந்தூர் செல்வதற்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில், வரும் 20-ம்தேதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம்…
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ஆம் தேதி…
இஸ்ரேல்: ஹமாஸ் உடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.…