கடுமையாக உயர்ந்த தங்கம் விலை…சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

இன்றைய தங்கம் வெள்ளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு.
எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு. இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம்,வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது.
அந்த வகையில், கடந்த சில நாட்களாகவே சரிந்துவந்த தங்கத்தின் விலை ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்திருக்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அதிகரித்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் இன்று (13. 01. 2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 உயர்ந்திருக்கிறது. ஒரு சவரன் தங்கம் நேற்று ரூ.46,560க்கு விற்பனை ஆன நிலையில் இன்று ரூ.46760க்கு விற்கப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,820இல் இருந்துரூ.25 உயர்ந்து ரூ.5,845ஆக உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.78க்கு விற்பனை ஆகிறது.
Holiday: வங்கிகளுக்கு இன்று முதல் 5 நாட்களுக்கு விடுமுறை.!
சென்னையில் நேற்று (12. 01. 2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.46,560-க்கும் கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ரூ.5,820-க்கும் விற்பனையானது. மேலும், வெள்ளி விலை மாற்றமில்லாமல் ஒரு கிலோ ரூ.77,500-க்கும் ஒரு கிராம் ரூ.77.50-க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025
வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!
April 25, 2025