விண்ணை தொட்ட தங்கம் மற்றும் வெள்ளி விலை.. இல்லத்தரசிகள் அதிர்ச்சி.!
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாற்றில் முதல்முறையாக புதிய உச்சத்தை எட்டியதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, தங்கத்தின் விலையும் உயர்கிறது.
இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக அதிகப்படியான ஏற்றம் கண்டு வந்த தங்கம் விலை, வார தொடக்க நாளான இன்று மட்டும் ரூ.400 உயர்ந்து ரூ.55,000-ஐ தாண்டியது. இந்த புதிய உச்சத்தை எட்டியதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னையில் இன்றைய நிலவரப்படி (20-05-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.55,200க்கும், கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.6,900-க்கும் விற்பனையாகிறது. நேற்று (ஏப்ரல் 19ஆம் தேதி) கிராம் ரூ.6,890-க்கு விற்பனையானது அதிகபட்ச விலையாக இருந்த நிலையில், இன்று ரூ.6,900க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை தான் இப்படி உச்சம் கண்டு வருகிறது என்று பார்த்தால் வெள்ளி விலை அதற்கு போட்டியாக, வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, வெள்ளி விலை இன்று அதிரடியாக கிராமுக்கு ரூ.4.50 உயர்ந்து ஒரு கிராம் ஒன்றிக்கு ரூ.101-க்கும், ஒரு கிலோ ரூ.1,01,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.