இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி… ரூ.57 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை.!
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தை எட்டியது. ஒரு சவரன் ரூ.56,800 விற்பனை ஆகிறது.
சென்னை : ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.57 ஆயிரத்தை நெருங்கி புதிய உச்சம் தொட்டுள்ளது. இதனால், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.7,060ஆக விற்பனையானது. அதேபோல், 1 சவரன் தங்கம் ரூ.56,480 ஆக விற்கப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் இன்றைய நிலவரப்படி (26.09.2024) 22 கேரட் ஆபரண தங்கம் விலை இன்று 1 கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ரூ.7,100ஆக விற்பனையாகிறது. மேலும், 1 சவரன் தங்கம் விலை ரூ.320 உயர்ந்து, ரூ.56,800ஆக விற்பனை செய்யப்படுகிறது.
அதே நேரத்தில், 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.60,120 ஆகவும், கிராமுக்கு ரூ.7,515 ஆகவும் விற்பனையாகிறது.
மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.101 க்கும், 1 கிலோவுக்கு ரூ.101,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.