இல்லத்தரசிகள் அதிர்ச்சி…மீண்டும் உயர்ந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை….!!

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை தற்போது மேலும் ரூ.15 அதிகரித்துள்ளது.
சர்வதேச சந்தையில்,கச்சா எண்ணெயின் விலை அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி,பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும்,சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை, மாதத்தில் ஒரு முறை அல்லது இருமுறை மாற்றம் செய்யப்படுகின்றன.அந்த வகையில்,சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த செப்.1 ஆம் தேதி 25 ரூபாய் உயர்த்தப்பட்டு 900 ரூபாயாக அதிகரித்தது.
இந்நிலையில்,பெட்ரோலிய நிறுவனங்கள் உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலையை தற்போது மேலும் ரூ.15 அதிகரித்துள்ளது. அதன்படி,தற்போது,சென்னையில் சிலிண்டர் விலை ரூ.915-க்கு விற்பனை செய்யப்படுகிறது.5 கிலோ சிலிண்டரின் புதிய விலை இப்போது ரூ.502 ஆக உயர்ந்துள்ளது.இந்த புதிய கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.இதனால்,இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Petroleum companies have increased the price of domestic LPG cylinders by Rs 15. The price of a non-subsidized 14.2 kg cylinder in Delhi is now Rs 899.50. The new rate of 5kg cylinder is now Rs 502. The new rates are effective from today. pic.twitter.com/nQqtgdOq7q
— ANI (@ANI) October 6, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!
April 28, 2025