குறைந்தது தங்கம் விலை.. நிம்மதி மூச்சு விடும் இல்லத்தரசிகள்! இன்றைய நிலவரம் என்ன.?
சென்னை: கடந்த 2 நாள்களில் மட்டும் ரூ.1680 குறைந்துள்ளதால் நகைப் பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, தங்கத்தின் விலையும் உயர்கிறது.
இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது இறங்குமுகத்தில் இருக்கிறது. குறிப்பாக கடந்த 4 நாள்களில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2000 மற்றும் வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.3,100 குறைந்துள்ளது.
சென்னையில் இன்றைய நிலவரப்படி (24-05-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.53,200க்கும், கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.6,650க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒருகிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து கிராம் ரூ.96.50க்கும், கிலோ வெள்ளி ரூ.500 குறைந்து ரூ.96,500க்கும் விற்பனையாகிறது.
சென்னையில் நேற்றைய நிலவரப்படி (23-05-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.54,000க்கும், கிராமுக்கு ரூ.110 குறைந்து ரூ.6,750க்கும் விற்பனையானது. அதெ போல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 3.30 குறைந்து, ஒரு கிராம் ரூ. 97-க்கும், கிலோவிற்கு ரூ.3,300 குறைந்து ரூ.97,000 -க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.