ரூ.50,000த்தை நெருங்கிய தங்கம் விலை…அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.!

Gold_silver_price [file image]

Gold Price: கடந்த மூன்று நாட்களாக குறைந்த வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரித்து, ரூ.50,000த்தை நெருங்கிய நிலையில் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, ​​தங்கத்தின் விலையும் உயர்கிறது.

இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு கொண்டே வருகிறது. அதன்படி, இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்க்கலாம்.

சென்னையில் இன்றைய நிலவரப்படி (27.03. 2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.49,720க்கும், கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.6,215க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் குறைந்து ரூ.80.20க்கும், கிலோ வெள்ளி ரூ.300 குறைந்து ரூ.80,200க்கும் விற்பனையாகிறது

சென்னையில் நேற்றைய நிலவரப்படி, (26.03. 2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.49,600க்கும், கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.6,200க்கும் விற்பனையானது. அதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் குறைந்து ரூ.80.50க்கும், கிலோ வெள்ளி ரூ.300 குறைந்து ரூ.80,500க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Ilayaraja Biopic
mp sudha anbumani
Jayalalithaa and pm modi
nzvsban
vidaamuyarchi ott release date
kaliyammal tvk