மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.!
சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 காசுகள் அதிகரித்து 93.11ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 14 காசுகள் அதிகரித்து 86.45ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.கடந்த 6, 7 மற்றும் 8-ஆம் தேதிகளில் விலை மாற்றமின்றி விற்பனையான பெட்ரோல், டீசல் விலையானது 9-ஆம் தேதியில் இருந்து கிடுகிடுவென மீண்டும் உயரத் தொடங்கியது .இது வாகன ஓட்டிகள் இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.கடந்த சில வார காலமாக உயர்ந்து வந்த பெட்ரோல் டீசல் விலையானது கடந்த மூன்று தினங்களாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டது.ஆனால் இன்று சென்னையில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது.
அந்த வகையில் நேற்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 92.90ரூபாய்க்கும்,டீசல் விலை லிட்டருக்கு 86.31ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 காசுகள் அதிகரித்து 93.11ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 14 காசுகள் அதிகரித்து 86.45ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.