குறைந்த விலையிலேயே உயர்ந்த தங்கம்.! சவரனுக்கு ரூ.952 உயர்வு.! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.952 உயர்ந்து, ரூ.31,512க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 119 உயர்ந்து ரூ.3, 939 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சென்னையில் வெள்ளியின் விலை ரூ 1.20 காசுகள் உயர்ந்து ரூ 39.30 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இதனிடையே நெற்றியை நிலவரப்படி, தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.123 குறைந்து ரூ.3,820க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு ரூ.984 குறைந்து, ரூ.30,560க்கு விற்பனையானது. அதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.90 குறைந்து, ரூ.38.10க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று மீண்டும் ரூ.952 உயர்வு, ரூ.31,512க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா தாக்கம் காரணமாக சர்வதேச அளவில் பங்குச் சந்தைகள் சரிந்து, தங்க வர்த்தகம் அதிகரித்து வருகிறது. இதனால் தங்க வர்த்தகத்தில் ஏற்ற இறக்கமான நிலை ஏற்பட்டுள்ளது.