வார தொடக்க நாளில் குறைந்தது தங்கம் விலை.! இன்றைய நிலவரம் இதோ…
தங்கம் விலை : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்படுகிறது. அதேபோல், சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி மாதிரியான உலோகங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தேவையே விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. கடந்த 23ம் தேதி நடைபெற்ற மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிக்கு இறக்குமதி வரி குறைப்பு காரணமாக, கடந்த வாரம் தொடர் குறைவினால் மக்கள் சந்தோஷத்தில் உள்ளனர். அதே போல், வார தொடக்க நாளான இன்றும் சவரனுக்கு ரூ.400 குறைந்ததால், நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னையில் இன்றைய நிலவரப்படி (29-07-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.51,320க்கும், கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.6,415க்கும் விற்பனையாகிறது. அதே நேரம், வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.89.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் நேற்றைய நிலவரப்படி (28-07-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது எந்த மாற்றமுமின்றி விற்பனையானது. அதன்படி, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.51,720-க்கும், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.6,465-க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதே போல சென்னையில் வெள்ளியின் விலையும் நேற்றைய விலைக்கே இன்றும் விற்பனையானது.