Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று அதிகரித்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.
சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, தங்கத்தின் விலையும் உயர்கிறது.
இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு கொண்டே வருகிறது. அதன்படி, இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்க்கலாம்.
இன்றைய தினம் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. இவ்வாறு தொடர்ந்து சிறிதளவு தங்கம் விலை சரிந்து வருகிறது. இருந்தாலும், இந்த குறைப்பு இல்லத்தரசிகளை சந்தோஷம் படுத்தவில்லை என்றே சொல்ல வேண்டும்.
சென்னையில் இன்றைய நிலவரப்படி (25-04-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,680க்கும், கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,710க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.86க்கும், கிலோவிற்கு ரூ.500 குறைந்து ரூ.86,000க்கும் விற்பனையாகிறது
சென்னையில் நேற்றைய நிலவரப்படி (24-04-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து, 53 ஆயிரத்து 840 ரூபாயாக்கும் , கிராம் ஒன்று 6 ஆயிரத்து 730 ரூபாயாக்கும் விற்பனையானது. அதுபோல், வெள்ளி விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல், கிராம் 86 ரூபாய் 50 பைசாவாக விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பெர்த் : இந்திய அணியில் சம்பவம் செய்வதற்கு நான் இருக்கிறேன் என்கிற வகையில், இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக…
புதுக்கோட்டை : நகர்ப்புறத்தில் அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக புதுக்கோட்டையில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவில் 235 இடங்களை கைப்பற்றி…
சவுதி : 18வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச் 14 ம் தேதி தொடங்கி மே 25 ம்…
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…