தங்கம் விலை திடீர் உயர்வு.. இன்றைய நிலவரம் இதோ.!
சென்னை : ஆபரணத்தங்கம் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணம் செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி இறக்குமதி வரி குறைப்பு காரணமாக, ஒரு வாரமாக தங்கத்தின் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது.
அதன் பிறகு, தங்கத்தின் விலையானது படிப்படியாக உயர தொடங்கியது. கடந்த 12ஆம் தேதி ரூ.51,760-க்கு விற்பனையான சவரன் தங்கம், 8 நாட்களில் ரூ.1,920 அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் விலை மேலும் உயரக்கூடும் என, நகைக்கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
சென்னையில் இன்றைய நிலவரப்படி (21-08-2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.53,680க்கும், கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.6,710க்கும் விற்பனையாகிறது.
24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.58,560 ஆகவும் கிராம் ஒன்று ரூ.7,320 ஆகவும் விற்பனையாகிறது. அதே நேரம், வெள்ளி விலை எந்த வித மாற்றம் இல்லாமல், ஒரு கிராமுக்கு ரூ.92க்கும், ஒரு கிலோ ரூ.92,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் நேற்றைய நிலவரப்படி (20-08-2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,280-க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,660-க்கும் விற்பனையானது.
24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.58,120 ஆகவும் கிராம் ஒன்று ரூ.7,265 ஆகவும் விற்பனையானது. அதே நேரம், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.92க்கும், ஒரு கிலோ ரூ.92,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.