2வது நாளாக குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதோ!!
24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.60,400-க்கும், கிராமுக்கு ரூ.7,550 ஆகவும் விற்பனையாகிறது.
சென்னை : கடந்த சில நாள்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. நீண்ட கால அளவில் விலை ஏறுமுகமாகவே இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து, ரூ.56,760க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.25 விலை குறைந்து ரூ.7,095க்கு விற்பனையாகிறது.
அதே நேரத்தில், 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.60,400-க்கும், கிராமுக்கு ரூ.7,550 ஆகவும் விற்பனையாகிறது.
மேலும், வெள்ளியை பொறுத்தவரையில் விலை மாற்றம் இன்றி ஒரு கிராம் ரூ.103க்கு விற்கப்படுகிறது.